/* */

முதுமலையில் யானைகள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி விழா: சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு

முதுமலை புலிகள் காப்பகம் யானைகள் முகாமில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த விநாயகர் சதுர்த்தி விழா.

HIGHLIGHTS

முதுமலையில் யானைகள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி விழா: சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு
X

முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள விநாயகர் கோவிலில் கிருஷ்ணன் மற்றும் மசினி என்ற இரு யானைகள் மணி அடித்து காலை உயர்த்தி விநாயகரை வழிப்பட்டன.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் கடந்தாண்டு எளிமையாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா இம்முறை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஆண்டு தோறும் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா கோலகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த முறையும் யானைகள் முகாமில் உள்ள 17 வளர்ப்பு யானைகள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடின. அலங்கரிக்கப்பட்டு உணவு உண்ணும் மாடத்திற்கு யானைகள் அழைத்து வரப்பட்டன.

பின்பு யானைகள் முகாம் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் கிருஷ்ணன் மற்றும் மசினி என்ற இரு யானைகள் மணி அடித்தவாறு மூன்று முறை கோவிலை சுற்றி வந்து மண்டியிட்டு காலை உயர்த்தி பிளறி விநாயகரை வழிபட்டன இதை சுற்றுலா பயணிகள் பிரமிப்புடன் கண்டு ரசித்தனர். பின்பு யானைகளுக்கான சத்து மாவு, பழங்கள், கரும்பு, கேள்வரகு உள்ளிட்ட அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் முதுமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் அனுமதியின்றி எளிமையாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா இம்முறை தமிழக அரசு தளர்வுகளுடன் பொது ஊரடங்கு அறிவித்த நிலையில் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து விநாயகர் சதுர்த்தி விழாவை கண்டு ரசித்தனர்.

மேலும் ஒவ்வொரு சுற்றுலா பயணிகள் கூறும்போது கொரோனாவால் கடந்த ஒன்றரை வருடங்களாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் இருந்த நிலையில் இந்த முறை விநாயகர் சதுர்த்தி தினத்தில் முதுமலையில் யானைகள் கொண்டாடிய இந்த விழாவை காண்பது பெரும் மகிழ்ச்சியாக உள்ளதென தெரிவித்தனர்.

Updated On: 10 Sep 2021 4:52 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...