பொதுமக்களுடன் வனத்துறையினர் கலந்தாலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகா அல்லிமாயார் வருவாய் கிராமத்தில் தெங்குமரஹாடா என்ற குக்கிராமம் மற்றும் இதை சுற்றி உள்ள 500 ஏக்கர் நிலம் அடர்ந்த வனப்பகுதிக்குள் வருவதால், இங்குள்ள பொதுமக்களை வேறு இடத்துக்கு குடியமர்த்துவது தொடர்பாகவும், இந்த நிலத்தின் சட்டரீதியான நிலையை அங்கு வாழும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
உத்தரவின் படி நீலகிரி, ஈரோடு மற்றும் கோவை மாவட்ட கலெக்டர்கள், சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர்கள், நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்ட வன அலுவலர்கள் அடங்கிய குழுவினர் தெங்குமரஹாடா கிராமத்துக்கு சென்று மேற்கண்ட பொருள் தொடர்பாக பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என்று நீலகிரி கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu