நீலகிரியில் பிடிபட்ட T 23 புலி நலமுடன் இருப்பதாக வனத்துறை தகவல்
நீலகிரியில் பிடிபட்ட T 23 புலி
முதுமலை புலிகள் காப்பகத்தில் பிடிப்பட்ட T 23 புலிக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. கூடலூரில் சுற்றுப் பகுதிகளில் நான்கு மனித உயிர்களையும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றT 23 என்ற புலி அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது.
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக வனத்துறைக்கு போக்குக் காட்டி வந்த அந்தப் புலி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் சுமார் 15 நாட்களுக்கும் மேல் வனத்துறைக்கு சிக்காமல் போக்கு காட்டியது. ஒரு வழியாக கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி T 23 புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது பிடிபட்ட புலி மைசூர் வன உயிரியல் மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது மூன்று மாதமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் T 23 புலிக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் புலி ஆரோக்கியத்துடன் இருப்பதும் மருத்துவர்கள் அதற்கு சிகிச்சை அளிக்கும் போது அமைதியான முறையில் கர்ஜித்து மருத்துவ சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.
பெரிய அளவிலான காயங்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு முகம் மற்றும் முதுகில் உள்ள சிறு காயங்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோல் வனத்துறையினர் தெரிவிக்கையில் நாளொன்றுக்கு T 23 புலி 100 முதல் 150 கிலோ வரை இறைச்சி உண்பதாகும் அதனுடைய உடல் ஆரோக்கியம் நலமாக உள்ளதாக தெரிவித்தனர். முழுமையாக குணமடைந்த பின்னரே காட்டில் விட வேண்டுமா அல்லது வன உயிரியல் மீட்பு பூங்கா விலேயே பராமரிக்கப்படுமா என்பது அதன் பின் முடிவு செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu