உதகை அருகே மின்வேலியில் சிக்கி கரடி பலி

உதகை அருகே மின்வேலியில் சிக்கி கரடி பலி
X

மின் வேலியில் சிக்கி உயிரிழந்த கரடி 

வாழைத்தோட்டம் பகுதியில் விவசாய நிலத்தில் மின் வேலியில் சிக்கி கரடி இறந்தது தோட்ட உரிமையாளரை கைது செய்து வனத்துறை விசாரணை

உதகை அருகே வாழைத்தோட்டம் பகுதியில் விவசாய நிலத்தில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கரடி தோட்ட உரிமையாளரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வனத்தை ஒட்டி உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி என்பதால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் மின் வேலியில் சிக்கி ஆண் கரடி இறந்துள்ளது ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கரடியை கண்டு உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ பகுதிக்கு வந்த வனத்துறையினர் கரடியின் உடலை மீட்டனர் மேலும் தோட்ட உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!