நீலகிரி மாவட்டத்தில் 16 -ஆம் நாளாக புலியைத் தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

நீலகிரி மாவட்டத்தில் 16 -ஆம் நாளாக  புலியைத் தேடும் பணியில் வனத்துறையினர்  தீவிரம்
X

நீலகிரி மலைப்பகுதியில் புலியை தேடும் வேட்டையில்  ஈடுபட்டுள்ள வனத்துறையினர்

நீலகிரி மாவட்டம் மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் T 23 புலியைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது

நீலகிரி மாவட்டம், மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதியில் சுற்றி திரியும் T23 புலியை தேடும் பணியில் தொடர்ந்து 16-வது நாளாக வனத்துறை ஈடுப்பட்டு வருகின்றனர். நிவபுலி தென்பட்ட இடங்களில் வைக்கப்பட்ட 65- கேமிராக்களை ஆய்வு செய்த போது T23 புலியை தவிர மற்ற 2 புலிகள் பதிவாகியுள்ளது. T23 புலி பதிவாகவில்லை. தற்சமயம் புலி தென்ப்பட்ட இடங்களில் 8 பேர் கொண்ட 4 குழுக்கள் T23 புலியை தேடி வருகின்றனர். இதில் மங்கள பசுவினை புலி அடித்து கொன்ற இடத்திற்கு ஒரு குழு சென்று புலியை தேடி வருகிறது. இதற்காக கும்கி யானைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
the future of ai in healthcare