முதுமலையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க தடை
முதுமலை சரணாலயத்தில் உள்ள விலங்குகள்.
நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கிராமங்கள் பெரும்பாலும் வனப்பகுதியை கொண்டதாகும்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்க உள்ள நிலையில் மக்கள் அனைவரும் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
குறிப்பாக தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க ஆர்வமுடன் இருக்கும் முதுமலையை சுற்றியுள்ள கிராம பொது மக்களுக்கு நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கிராமங்கள் வனப்பகுதியை கொண்டுள்ளதால் வனங்களையும் வன விலங்குகளையும் பாதுகாக்க பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்து பசுமை தீபாவளியை கொண்டாட வனத்துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
பட்டாசுகள் வெடிப்பதினால் வனவிலங்குகள் மற்றும் அதனுடைய குட்டிகள் அச்சம் அடைந்து ஊருக்குள் புகுவது நேரிடும் என்பதனால் பொதுமக்கள் அனைவரும் பசுமை தீபாவளியை கொண்டாடி வனத்துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என முதுமலை புலிகள் காப்பகத்தில் உட்பட்ட கிராமப் பகுதிகளில் வனத்துறை சார்பில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu