கூடலூரில் மரம் வெட்டியவர்களுக்கு அபராதம்

கூடலூரில் மரம் வெட்டியவர்களுக்கு அபராதம்
X
கூடலூர் பந்தலூர் பகுதியில் யூகலிப்டஸ் மரங்களை வெட்டிய 6 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்து எச்சரித்தனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலா பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு பகுதி உள்ளது.இங்கு யூக்கலிப்டஸ் மரங்களை சிலர் விறகுக்காக வெட்டியதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் ஆனந்தகுமார்,வனக்காப்பாளர் மாதவன் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்ட போது, அங்கு 5 மரங்கள் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கூடலூர் மாவட்ட வன அலுவலர் ஓம்கார் உத்தரவின் பேரில் அனுமதியின்றி மரங்களை வெட்டிய மாணிக்கம் உள்பட 6 பேருக்கு ரூ.24,000/அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil