கூடலூரில் ஆற்றங்கரையோரத்தில் ஓய்வெடுத்த முதலை: பொதுமக்கள் அச்சம்
பந்தலூர் பகுதியிலுள்ள அத்திக்குன்னா ஆற்றங்கரையில் முதலை தென்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் பகுதியிலுள்ள அத்திக்குன்னா ஆற்றங்கரையில் முதலை தென்பட்டதால், பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். மைதானத்தின் அருகே உள்ள ஆற்றங்கரை ஓரத்தில் அப்பகுதி மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
அதுமட்டுமில்லாமல் மைதானத்தில் குழந்தைகள் விளையாடச் சென்றிருந்தபோது, அப்பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் ஆற்றங்கரையோரத்தில் 12 அடி நீளமுள்ள முதலை ஒன்று, ஓய்வு எடுத்தபடி இருந்துள்ளதை கண்டு, தனது செல்போனில் அதை பதிவு செய்தார்.
மேலும், ஆற்றங்கரை ஓரத்தில் பொதுமக்கள் துணி துவைக்க செல்லவோ குழந்தைகள் விளையாடுவதற்கோ அச்சம் அடைந்தனர். கடந்த வாரம் முழுவதும், கூடலூர் பகுதிகளில் பெய்த கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் முதலை அடித்து வரப்பட்டு இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். கிராமத்தை ஒட்டிய ஆற்றங்கரையில் , முதலை இருப்பது கண்ட பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu