கூடலூர், அதிகாலை ஊருக்குள் புகுந்த காட்டு யானை: விளைநிலங்கள் சேதம்

கூடலூர், அதிகாலை ஊருக்குள் புகுந்த காட்டு யானை: விளைநிலங்கள் சேதம்
X

கூடலூர் அருகே ஊருக்குள் நுழைந்த யானை விளை நிலங்களை சேதப்படுத்தியது.

கூடலூர் ஸ்ரீ மதுரை கிராமத்தில் நுழைந்த காட்டு யானையால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

சமீபகாலமாக கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை கிராமத்தில் அதிகாலை 4 மணி அளவில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானை தென்னைமரம் வாழை மரங்களை சேதப்படுத்தியது குடியிருப்பின் அருகில் யானை நுழைந்ததால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

கிராமத்திற்குள் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் உயிர் போகும் அச்சத்தோடு உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், யானைகளை கண்காணிக்க தனி குழு அமைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கையை வனத்துறை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அடிக்கடி நடக்கும் இது போன்ற சம்பவங்களால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கிராம மக்கள் தொரப்பள்ளி சாலையில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!