உதகை அருகே வனப்பகுதியில் யானை பலி

உதகை அருகே வனப்பகுதியில் யானை பலி
X

வனப்பகுதியில் பலியான பெண் யானை.

முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வனப்பகுதியில் அமைந்துள்ள ஆற்றோரத்தில் பெண் யானை மரணமடைந்தது தொடர்பாக வனத்துறை விசாரணை.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம், வெளி மண்டல வனப்பகுதியான சீகூர் வனபகுதிக்குட்பட்ட குண்டட்டி ஆற்றுப்படுகையில், வனத்துறையின் வேட்டை தடுப்பு காவலர்கள், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆற்றோரத்தில் பத்து வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்த வேட்டை தடுப்பு காவலர்கள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அடிப்படையில் யானை இறந்த இடத்திற்கு சென்ற வனத்துறை உயர் அதிகாரிகள், யானை உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை எதனால் இறந்தது என்பது குறித்து கண்டறிய, கால்நடை மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர் .

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி