கூடலூரில் யானை அட்டகாசம்: மக்கள் அச்சம்

கூடலூரில் யானை அட்டகாசம்: மக்கள் அச்சம்
X

பைல் படம்.

அடர்ந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலூர் அருகே பல கிராமங்களில் அரிசிராஜா என்ற காட்டுயானை நடமாட்டத்தால் நாள்தோறும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களையும், குடியிருப்புகளையும் சேதப்படுத்த வரும் காட்டு யானையை விரட்ட கோரிக்கை விடுத்தும் இதுவரை வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு கூடலூர் அருகே உள்ள குந்தி தால் எனும் கிராமத்தில் விளைநிலங்களில் புகுந்த காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்களை சூறையாடியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தொடர்ந்து அரிசி ராஜா காட்டு யானையால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக கூறும் கிராம மக்கள் உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்