உதகை அருகே யானை தாக்கி ஒருவர் பலி

உதகை அருகே யானை தாக்கி ஒருவர் பலி
X

பலியான இருதயராஜ்.

உதகையில் இருந்து மசினகுடி செல்லும் மாவனல்லா பகுதியில், இரு சக்கர வாகனத்தில் சென்றவரை யானை தாக்கி கொன்றது.

உதகையில் இருந்து மசனகுடி செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாகும். அதிகாலை வேளையில் வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படும். இந்நிலையில், உதகையை சேர்ந்த இருதயராஜ் என்பவர் இருசக்கர வாகனத்தில் மசனகுடி சென்று கொண்டிருந்தார்.

மாவனல்லா என்னும் பகுதியில் சென்ற போது, திடீரென சாலையில் வந்த காட்டு யானை அவரை தாக்கியது இதையடுத்து முதல் உதவி சிகிச்சைக்காக மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் அனுமதித்து பின்னர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!