எடப்பாடியார் தாயாரை கொச்சைப்படுத்தி பேசவில்லை: ஆ.ராசா விளக்கம்
கூடலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காசி லிங்கத்தை ஆதரித்து கூடலூர் நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா பேசுகையில்,
மு க ஸ்டாலின் என்பவர் சிறுவயதில் மிசாவில் சிறை சென்று படிப்படியாக கட்சியில் வளர்ந்து இன்று தலைவராகவும், அதைப்போல் அரசுப்பணியில் மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் நாளை முதல்வர் என்று அனுபவசாலியாகத் திகழ்வதாகவும், எடப்பாடி பழனிசாமி நீர் வழியில் முதல்வர் ஆகாமல் குறுக்கு வழியில் முதல்வர் ஆனதாக தான் கூறிய கருத்தை சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் திரித்து, பிரித்து ராசா வாகிய நான் எடப்பாடி பழனிசாமி பிறப்பு மற்றும் அவரது தாயாரை குறித்து கொச்சைப்படுத்தி பேசியதாக பரப்பி வருகின்றனர். ஆனால் நிச்சயமாகவும், சத்தியமாக, கலைஞர் மீது ஆணையாக தான் அப்படி பேசவில்லை என்றார்.
இந்த பிரச்சாரத்தின் போது மாவட்ட செயலாளர் முபாரக் , தேர்தல் பொறுப்பாளர் தண்டபாணி , நகர செயலாளர் ராஜேந்திரன் , தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டிராஜ் , மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu