சேற்றில் சிக்கி குட்டி யானை உயிரிழப்பு: நகராமல் அங்கேயே நிற்கும் தாய் யானை

சேற்றில் சிக்கி இறந்த குட்டி யானையின் அருகில் தாய் யானை உள்ளிட்ட 3 யானைகள் இருப்பதால் வனத்துறையினர் நெருங்க முடியவில்லை.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் யானைகள் குடியிருப்பு பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் பந்தலூரை அடுத்துள்ள மழவன் சேரம்பாடி தனியார் தோட்டம் ஒன்றில் நேற்றிரவு யானைகள் கூட்டம் புகுந்துள்ளது.இந்த கூட்டத்தில் இருந்த குட்டியானை ஒன்று இங்கு உள்ள சேற்றுப் பகுதியில் சிக்கியுள்ளது. சேற்றில் சிக்கிய குட்டி யானையை மீட்க யானைகள் முயன்றும் மீட்க முடியாததால் குட்டியானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குட்டி யானையின் அருகில் நகராமல் நிற்கும் தாய் யானை உள்ளிட்ட மூன்று யானைகளின் பாசப் போராட்டம் காரணமாக இறந்த குட்டி யானையின் அருகில் வனத்துறையினர் நெருங்க முடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. யானைகள் அங்கிருந்த சென்ற பின்னரே குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய முடியும் என்றும், குட்டி யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இறந்த குட்டியுடன் தாய் யானை உட்பட மூன்று யானைகள் நடத்திவரும் பாசப்போராட்டம் காண்போரின் கண்ணில் நீர் வரச் செய்தது.

Tags

Next Story
crop opportunities ai agriculture