3 பேரை கொன்ற காட்டு யானை : அமைச்சர் பார்வையிட்டார்

3 பேரை கொன்ற காட்டு யானை : அமைச்சர் பார்வையிட்டார்
X

3 பேரை கொன்ற யானை பாகனுடன் பழகி வருவதை வனத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

3 பேரை கொலை செய்த காட்டு யானை பிடிபட்டது. அது பாகனுடன் பழகும் விதத்தை வனத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி பகுதியில் காட்டுயானை சங்கர் , தந்தை மகன் உட்பட 3 பேரை கொடூரமாக கொன்றது. இதைத்தொடர்ந்து ஆட்கொல்லி யானை சங்கரை இரு மாதங்கள் போராடி வனத்துறை மருத்துவ குழு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிக்கப்பட்ட ஆட்கொல்லி யானை சங்கரை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் (கரோல்) எனப்படும் மர கூண்டில் அடைத்து கும்கி பயிற்சி அளித்து வருகின்றனர்.

பிடிபட்ட கொலைகார யானை

இதை தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சங்கர் யானை வனத்துறையினர் மற்றும் யானை பாகனிடம் நெருங்கி பழகி வருவதை கண்டதுடன் விசாரித்தும் அறிந்தார். அந்த யானை, பாகன் இடும் கட்டளைக்கு கீழ்படிந்து வருகிறது. ஆட்கொல்லி யானையை சாதுவாக மாற்றிய யானை பாகனுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil