முதுமலையில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியதப்பட்டதை அடுத்து, நீலகிரி மாவட்டம் முதுமலையில், வளர்ப்பு யானைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையில், வன விலங்குகளையும் தொற்று விட்டு வைக்க வில்லை. சமீபத்தில், வண்டலூர் உயிரியல் பூங்காவில், நீலா என்ற பெண் சிங்கம் கொரோனாவுக்கு பலியானது.

இதையடுத்து, வனத்துறை சார்பில், முதுமலை, டாப்சிலிப், சத்தியமங்கலம், களக்காடு உள்ளிட்ட புலிகள் காப்பகங்களில் உள்ள முகாம் யானைகளுக்கு கொரோனா மாதிரி பரிசோதனை கால்நடை மருத்துவ குழு சார்பில் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தனர்.

முதற்கட்டமாக, முதுமலையில் உள்ள 28 யானை, டாப்சிலிப்பில் 28 யானைகளுக்கு மாதிரி கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. சோதனையில் சேகரிக்கப்படும் மாதிரிகளை, போபாலில் உள்ள கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், இன்று 11:00 மணியளவில் டாப்சிலிப்பில் நடக்கும் யானைகளுக்கான மாதிரி கொரோனா பரிசோதனைகளை பார்வையிடுகிறார்.

வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கூறுகையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் கொரோனா தொற்றுக்கு பலியானது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் புலிகள் காப்பகங்களில் உள்ள முகாம் யானைகளின் சளி, ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!