காவல்துறை மூலம் பழங்குடியினர் கிராமத்தில் உதவி வழங்கும் விழா
செம்மநத்தம் கிராமத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செம்மநத்தம் கிராமத்தில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் குடிநீர் தொட்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் பழங்குடியின மக்களுக்கு அன்றாட தேவைகளுக்கு பயன்படும் வகையில் 45 குடிநீர் தொட்டிகளை வழங்கினார். பூதநத்தம் கிராமத்தில் 28 குடிநீர் தொட்டிகள் வழங்கப்பட்டது. கொரோனா பரவி வருவதால் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முககவசம் அணிவதன் அவசியம் குறித்தும், குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் போலீசார் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu