அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு

அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு
X

வனத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கூண்டு.

கூடலூர் அருகே கிராமத்தில் அட்டகாசம் செய்யும் புலியை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் கூண்டு வைக்கப்பட்டது.

கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக கால்நடைகளை தாக்கி கொண்டு வரும் புலியால் மக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் சேமுண்டி எனும் பகுதியில் புலி தாக்கி பசு பலியானது. இதையடுத்து அக்கிராம மக்கள் இறந்த பசு உடலுடன் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் புலியை கூண்டு வைத்து பிடிக்கும் வரை போராட்டம் நடத்தப் போவதாக கூறி மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புலியை பிடிக்க கூண்டு வைப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து இன்று சேமுண்டி பகுதியில் வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!