நில உட்பிரிவு செய்ய லஞ்சம்: பந்தலூர் நில அளவையர் கைது

நில உட்பிரிவு செய்ய லஞ்சம்: பந்தலூர் நில அளவையர் கைது
X

 பழனிசாமி

நில உட்பிரிவு செய்ய லஞ்சம் பெற்றதாக, பந்தலூர் நில அளவையரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மாமியார், இவருக்கு 30 சென்ட் நிலம் வழங்கியுள்ளார். இந்த நிலத்தை உட்பிரிவு செய்ய, பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாசுதேவன் விண்ணப்பித்துள்ளார். நில அளவை செய்வதற்கு, நில அளவையர் பழனிசாமி, வாசுதேவனிடம் ரூ.6000 லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து வாசுதேவன், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்துடன் வாசுதேவன் பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று, நில அளவையர் பழனிசாமிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் கீதாலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் ரங்கநாதன், சாதன பிரியா போலீஸார் நில அளவையர் பழனிசாமியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Tags

Next Story