மக்கள் நடமாட்டம் குறைந்ததால் சாலைகளில் உலா வரும் கரடி !
X
மக்கள் நடமாட்டம் இல்லாததால் சுதந்திரமாக உலா வந்த கரடி,
By - N. Iyyasamy, Reporter |18 May 2021 7:22 PM IST
ஊடரடங்கு காரணமாக வனப்பகுதிகளிலுள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால் வனவிலங்குகள் உலா வரத் தொடங்கியுள்ளன.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக புதிய ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் வனப் பகுதிகளிலுள்ள சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சாலையோரம் வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் உலா வருகின்றன.
இந்நிலையில் இன்று முதுமலை புலிகள் காப்பகத்துக்கு செல்லும் பிரதான சாலை ஓரத்தில் கரடி ஒன்று மரத்தின் மீது தன் முதுகை வைத்து சொரிந்து ஹாயாக உலா வந்தது.
சிறிது நேரம் மரத்தில் சாய்ந்து தனது முதுகைச் சொறிந்த கரடி பின்பு வனப்பகுதிக்குள் சென்றது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் அந்த கரடியை பார்வையிட்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu