உதகை அருகே சிறுத்தை தாக்கி கரடி குட்டி பலி

உதகை அருகே சிறுத்தை தாக்கி கரடி குட்டி பலி
X

சிறுத்தை தாக்கி இறந்து கிடக்கும் கரடிக்குட்டி 

முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் சிறுத்தை தாக்கி 3 மாத கரடி குட்டி பலியானது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசனகுடி சீகூர் வனச்சரகத்தில் மூன்று மாத கரடி குட்டி இறப்பு. முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் யானை, மான், புலி ,சிறுத்தை காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கின்றன.

இந்நிலையில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், சீகூர் வனப்பகுதியில் இன்று வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது பிறந்து மூன்று மாதமே ஆன கரடி குட்டி இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து இறந்த கரடியை பிரேத பரிசோதனை செய்ததில் சிறுத்தை தாக்கி கரடி இறந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!