கூடலூர் அருகே மீண்டும் புலி அட்டகாசம் : கால்நடையை தாக்கி கொன்றது
கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் மீண்டும் கால்நடையை அடித்துக் கொன்ற புலி தொடரும் புலியின் அட்டகாசத்தால் நிம்மதியின்றி தவித்து வரும் பொதுமக்கள்.
கடந்த 4 நாட்களாக கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளான ஸ்ரீ மதுரை சேமுண்டி ,ஓடக் கொல்லி அம்பலமூலா, தேவன் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகளையும் மனிதர்களையும் தாக்கிக் கொன்ற புலி இதுவரை வனத்துறைக்கு சிக்காமல் உள்ளது.
இதனிடையே தேவர்சோலை தேவன் எஸ்டேட் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா இன்று ஆய்வு மேற்கொண்டார் மேலும் புலி தாக்கி இறந்த சந்திரன் வீட்டிற்குச் சென்று அவர் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்பு செய்தியாளர்களிடம் கூறிய அவர் மனிதர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் புலி நடமாட்டம் கண்காணிக்க முடிவதில்லை எனவும் எனவே பொதுமக்கள் யாரும் வெளி செல்ல வேண்டாம் எனவும் இன்றோ அல்லது நாளையோ வனத்துறையினர் புலியை கண்காணித்து புலியை பிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் இப்பகுதியில் பேருந்து இரண்டு நாட்களுக்கு இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் அதே பகுதியில் கால்நடையை புலி அடித்துக் கொன்றுள்ளது மேலும் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu