கூடலூர் அருகே 5ம் நாளாக தொடரும் புலி தேடுதல் வேட்டை: வனத்துறை தீவிரம்

கூடலூர் அருகே 5ம் நாளாக தொடரும் புலி தேடுதல் வேட்டை: வனத்துறை தீவிரம்
X

பைல் படம்.

கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் 5 ம் நாளாக புலியை தேடும் பணியை வனத்துறையினர் தீவிரம்காட்டி வருகின்றனர்.

கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் புலி, ஐந்து நாட்கள் ஆகியும் இன்றுவரை வனத்துறைக்கு சிக்காமல் உள்ளது.

தமிழக மற்றும் கேரளப் பகுதியில் இருந்து வந்திருக்கும் மருத்துவ குழுக்கள் வனத்துறையினர் என அனைவரும் பல இடங்களில் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அடர்ந்த காடு உயரமான தேயிலைச் செடிகள் என இருப்பதால் புலி நடமாட்டம் கண்காணிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு வெளியே வரவேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டு வருவதோடு அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகின்றன.

Tags

Next Story
ai marketing future