நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று 4 பேர் வேட்பு மனு தாக்கல்

நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று 4 பேர் வேட்பு மனு தாக்கல்
X

பைல் படம்.

நீலகிரியில் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் மொத்தம் 294 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ந் நடைபெறுகிறது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 28-ந் தேதி தொடங்கியது. 4 நகராட்சி, 11 பேரூராட்சி அலுவலகங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்களை பெற்று வருகின்றனர்.

இதில் இன்று உதகை நகராட்சியில் வார்டு 13ல் போட்டியிட நிக்கோலஸ், 24ல் சாபனா, பிரேமா, கூடலூர் நகராட்சியில் வார்டு 9 ல் ராமசாமி என மாவட்டத்தில் ம 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மற்ற பேரூராட்சிகள், நகராட்சிகளில் போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதுவரை 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story
2 வயசு வரைக்கும் உங்க குழந்தைங்களுக்கு இந்த உணவுகளை மட்டும் குடுக்காதீங்க!!