கூடலூரில் கஞ்சாவை பதுக்கி வைத்த 4 பேர் கைது.

கூடலூரில் கஞ்சாவை பதுக்கி வைத்த 4 பேர் கைது.
X
கூடலூரில், தேயிலைத்தோட்டத்தில் 4 கிலோ கஞ்சாவை பதுக்கியவர்கள், போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் உட்பட போலீசார், கூடலூர் பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, 4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, போலீசார் பறிமுதல் செய்து தீவிரவிசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ஜான் (40), கூடலூர் 1ம் மைல்பகுதியை சேர்ந்தவர் அலிபாவா (44), ஆணை செத்தக்கொல்லியை சேர்ந்த அப்பாஸ் (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆணை செத்தக்கொல்லியை சேர்ந்தஜாபர் என்பவரை தேடிவருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!