கூடலூர் அருகே வாகன விபத்து: 13 பேர் படுகாயம்

கூடலூர் அருகே வாகன விபத்து: 13 பேர் படுகாயம்
X

விபத்துக்குள்ளான வாகனம்.

கேரள மாநிலத்தில் இருந்து உதகையை நோக்கி வந்த சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் படுகாயமடைந்தனர்.

சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. இந்நிலையில் இன்று கேரள மாநிலம் கொச்சினில் இருந்து 13 பேர் உதகைக்கு சுற்றுலா வந்தபோது நாடுகாணி என்னும் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானது.

இதில் வாகனத்தில் பயணித்தவர்கள் விபத்தில் சிக்கினார். உடனடியாக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்தில் காயமடைந்த நபர்களை மீட்டு சிறு காயங்களுடன் இருந்த நான்கு பேரை கூடலூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

பலத்த காயமடைந்த 9 பேரை கேரளாவில் உள்ள நிலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!