கூடலூரில் 62,000 மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன.
அதன் அருகில் அடர்ந்த வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்கள் இருப்பதால் பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடையில் இருந்த மது பாட்டில்களை கிடங்கிற்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
மேலும் சூண்டி டாஸ்மாக் கடையில் உள்ள மதுபாட்டில்களை அங்கேயே தனி அறையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர் இந்நிலையில் மர்மநபர்கள் அந்த அறையின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூபாய் 11,000 மதிப்புள்ள 62 மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் நியூகோப் போலீசில் புகார் செய்யப்பட்டது அந்தப் புகாரின் பேரில் டாஸ்மாக் மேலாளர் சேகர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் கூடலூர் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் நேரில் சென்று டாஸ்மாக் கடை மற்றும் அதன் அறைகளை ஆய்வு செய்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகள் பதிவு செய்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu