தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்த 22 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்த  22 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
X

பிடிபட்ட மலைப்பாம்பு.

பிடிபட்ட மலைப்பாம்பை தமிழக-கேரள எல்லை கோட்டமூலா என்ற அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில், இன்று வழக்கம்போல் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். திடீரென இறை தேடி அங்கு வந்த ஒரு மலைப்பாம்பை கண்டு தோட்டத் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த நிலையில் சேரம்பாடி பகுதியில் பாம்பு பிடிப்பதில் வல்லமை பெற்ற தம்பா என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அந்த பகுதி சென்ற தம்பா அந்த பாம்பை பிடிக்கும் பணியில் சுமார் அரை மணி நேரம் போராடி அந்த பாம்பை பிடித்தார். சுமார் 35 கிலோ எடையும் 22 அடி நீளமுள்ள பிரம்மாண்ட மலைப்பாம்பை பிடித்த தம்பா அப்பகுதி மக்கள் உதவியோடு சேரம்பாடி வனச்சரக வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். அந்த பிரம்மாண்ட பாம்பை வனத்துறையினர் தமிழக-கேரள எல்லையான கோட்டமூலா அடர்ந்த வனப்பகுதியில், வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!