நீலகிரி வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X
நீலகிரியில் சாலை , பசுமை வீடுகள், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட ரூ.2. 28 கோடியில் முடிந்த மற்றும் நடைபெறும் பணிகள் ஆய்வு.

நீலகிரி மாவட்டம் மசனகுடி ஊராட்சிக்குட்பட்ட மாவனல்லா பகுதியில் 7.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமூக சுகாதார வளாகத்தினையும் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் கல்லட்டி தெப்பக்காடு சாலை முதல் அச்சக்கரை வரை ரூ 28 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சாலை பணியினையும் மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட தேக்கடி பகுதியில் பழங்குடியின மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ 1.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 55 வீடுகளையும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 8.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஐந்து வீடுகள் என மொத்தம் 2.15 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்ன சென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து முதுமலை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் 13.42 லட்சம் மதிப்பில் 45 வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமாலினி, செயற்பொறியாளர் சுஜாதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், மோகன் குமாரமங்கலம், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Next Story
ai in future agriculture