குறும்புத் தனத்துடன் விளையாடும் குட்டி யானை பொம்மி
நீலகிரி : முதுமலையில் யானை வளர்ப்பு முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் குட்டி யானை பொம்மியின் சிறு, சிறு குறும்புத்தனங்கள் காண்போரை கவர்ந்து வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிறந்து 3 மாதமே ஆன பெண் குட்டி யானை ஒன்று வனத்தை விட்டு வெளியேறி விளை நிலங்களில் சுற்றித்திரிவதை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் குட்டி யானையை மீட்டனர்.
பின்னர், பவானிசாகர் அருகே உள்ள வன கால்நடை மையத்திற்கு கொண்டு சென்று அங்கு குட்டியானையை வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன், தினமும் 15 லிட்டர் லேக்டோஜென், பால் கொடுத்து பராமரித்து வந்தார்.அந்த குட்டி யானைக்கு செல்லமாக அம்மு என பெயரிடப்பட்டது. இந்நிலையில் குட்டி யானையை முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் வைத்து பராமரிக்க அம்முவை முதுமலைக்கு
கொண்டுவரப்பட்டு குட்டி யானை கராலுக்குள் வைத்து பாகன் பொம்மன் மற்றும் அவரது மனைவி பராமரித்து வருகின்றனர். தினமும் காலை வெந்நீரில் அம்முவை குளிப்பாட்டி வருவதும், லாக்டோஜன் பவுடர், பால், சத்து மாத்திரைகள், குளுக்கோஸ் என சத்தான உணவுகளை மூன்று நேரமும் வழங்கி குட்டி யானையை குழந்தையை போல் பொம்மன் மற்றும் அவரது மனைவி பாராமரித்து வருகின்றனர். தற்பொது இந்த குட்டி யானை பொம்மி என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொம்மி யானை மரத்தின் மீது ஏறி விளையாடுவதும் அதை தூக்க முயற்சிப்பதும் உள்ளிட்ட சிறுசிறு செயல்களும் முதுமலையில் உள்ள வன அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. முதுமலையில் வனத்துறையினரின் செல்லப்பிள்ளையாக பராமரிக்கப்பட்டு வரும் பொம்மி பகல் நேரங்களில் கராலிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு குளிப்பாட்டி, நடைபயிற்சி மேற்கொண்டு மீண்டும் கராலுக்கு கொண்டு செல்லும் பொழுது மண்ணில் உருண்டு கராலுக்குள் செல்ல மறுப்பது என குழந்தைகள் போல் அடம் பிடிப்பதும் என தனது சிறு, சிறு குறும்பு தனத்தினால் முதுமலையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது இந்த குட்டி யானை பொம்மி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu