அடங்க மறுக்கும் பிடிபட்ட காட்டு யானை

அடங்க மறுக்கும் பிடிபட்ட காட்டு யானை
X
கூடலூர் அருகே பந்தலூர் சேரம்பாடி பகுதியில் பிடிபட்ட காட்டு யானை முதுமலையில் கரோலில் அடைக்கப்பட்டுள்ளது.

முதுமலையில் அடைக்கப்பட்ட காட்டுயானை சங்கர் கரோரில் கட்டப்பட்டுள்ள மரங்களை ஆக்ரோஷமாக தூக்க முயன்று கோபத்துடன் காணப்பட்டு வருகிறது.

ஒரு வாரத்திற்கும் மேலாக கூடலூர் அருகே பந்தலூர் சேரம்பாடி பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானையை நேற்று வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட காட்டுயானை முதுமலைக்கு இரவு கொண்டு செல்லப்பட்டது அங்கு காட்டுயானைக்காக அமைக்கப்பட்டிருந்த கரோலில் காட்டுயானை அடைக்கப்பட்டது.

இரவு அடைக்கப்பட்ட காட்டு யானையை வனத்துறையினரும் மருத்துவக் குழுவும் கண்காணித்து வந்தனர் இன்று பகல் நேரத்தில் காட்டுயானை ஆக்ரோஷமாக காணப்பட்டு கரோலில் கட்டப்பட்டிருந்த மரத்தை தனது தும்பிக்கையால் தூக்கியது. காட்டு யானை ஆக்ரோஷத்துடன் காணப்படும் நிலையில் வனத்துறையினரும் மருத்துவ குழுவினரும் அருகில் யாரும் செல்லாதவாறு கண்காணித்து யானைக்கு தேவையான உணவுகளை வழங்கி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture