இராணுவ பயிற்சி முடித்த வீரர்களுக்கு சத்திய பிரமாணம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியை பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லை பகுதிகளில் பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவர். 46 வாரங்கள் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களில் அதிகப்பட்சமாக இம்முறை 395 பேர் பயிற்சி முடித்து, ராணுவ வீரர்களாய் பணிபுரிய சத்தியப்பிரமாண நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதில் பயிற்சி முடித்து செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது, உப்பு உட்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர். பயிற்சியின் போது சிறந்து விளங்கிய 8 சிறந்த வீரர்களுக்கு காமாண்டர் ராஜேஷ்வர்சிங், பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் இளம் வீரர்கள் மிக உயர்ந்த தரமான பயிற்சி அடைந்ததை பாராட்டினர். மேலும் இந்திய இராணுவ வீரர்களுக்கு தரமான பயற்சி அளிக்கும் மெட்ராஜ் ரெஜிமெண்ட் சென்டரின் முயற்சியை பாராட்டினார். கோவிட் 19 சூழ்நிலையில் மிக கடினமாக உழைத்த அனைத்து வீரர்களையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் கூறினார். இத்தருணத்தில் கலந்து கொள்ள முடியாத இளம் வீரர்களின் பெற்றோர்களை நினைவு கூர்ந்து வாழ்த்தினார். பயிற்சியை முடித்த 395 ராணுவ வீரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வர்கள் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உயர்ராணுவ அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu