மூன்று பேரை கொன்ற யானை- பிடிக்க வனத்துறை தீவிரம்

மூன்று பேரை கொன்ற யானை- பிடிக்க வனத்துறை தீவிரம்
X

நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பகுதியில் காட்டு யானையை பிடிக்கும் நடவடிக்கைகள் துவங்கின.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து மூன்று பேரை குத்தி மிதித்துக் கொன்ற காட்டு யானையை மயக்க ஊசி பிடிக்கும் நடவடிக்கைகள் இந்த யானை கேரளாவுக்கு தப்பி ஓடியதால் தொய்வடைந்தது.இந்நிலையில் இந்த யானை மீண்டும் சேரம்பாடியை அடுத்த சப்பந்தோடு வனப்பகுதியில் உள்ள யானைக்கூட்டத்துடன் இந்த யானை சேர்ந்திருப்பதை வனத் துறையினர் கண்டுபிடித்து அதன் அடையாளங்களையும் கண்டுபிடித்து யானை இப்பகுதியில் இருப்பதை உறுதி செய்து உள்ளனர்.

இதனை அடுத்து யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் நடவடிக்கைகளை மீண்டும் வனத்துறையினர் துவக்கி உள்ளனர்.இதற்காக முதுமலையில் இருந்து விஜய், சுஜய் பொம்மன், முதுமலை, ஸ்ரீநிவாஸ் மற்றும் சாடிவயல் முகாம் யானை கலீம் ஆகிய ஆறு யானைகளும் சேரம்பாடி பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளன. மேலும் கால்நடை மருத்துவர்கள் சுகுமாறன், ராஜேஸ்குமார், மனோகரன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் வனத்துறை குழுவினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்