உதகை அருகே இரவில் சாலையை கடந்த கரடிகள்

உதகை அருகே இரவில் சாலையை கடந்த கரடிகள்
X

உதகையில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் உலா வந்த கரடிகளால் வாகனஓட்டிகள் அச்சமடைந்தனர்.

உதகை அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.பெரும்பாலும் வனப்பகுதியில் செல்லும் சாலை என்பதால் அதிகாலை வேளை மற்றும் இரவு நேரங்களில் யானைகள், மான்கள் ,கரடிகள் உள்ளிட்ட அனைத்து விலங்குகளும் கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் நேரமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு இச்சாலை வழியே சென்ற வாகன ஓட்டிகள், 3 கரடிகள் சாலையை கடந்ததைக் கண்டு வாகனத்தை நிறுத்தி கொண்டனர். சிறிது நேரம் சாலையிலேயே விளையாடிய கரடிகள்பின்பு வன பகுதிக்குள் சென்றது. இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் நிலையில் வாகன ஓட்டிகள் வேகத்தை கட்டுப்படுத்தி வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil