கூடலூரில் அங்கன்வாடி மையம் ஆய்வு

கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை ஊராட்சியில் 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் நிறைவு பெற்ற பணிகள் முடிவுற்ற நிலையில் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட குங்கூர் மூலா பகுதியில் 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி, ஸ்ரீ மதுரை ஊராட்சி மன்ற தலைவர் சுனில், உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu