யானை இறப்பு சம்பவம்- விடுதிகளுக்கு நோட்டீஸ்

யானைக்கு தீ வைத்து கொன்ற சம்பவம் தொடர்பாக உரிமம் இல்லாமல் நடத்தி வந்த 56 தனியார் தங்கும் விடுதிகளுக்கு நீலகிரி மாவட்ட நிர்வாக உத்தரவின் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கூடலூரை அடுத்துள்ள மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் யானைக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து எந்த வித உரிமமும் இன்றி தனியார் தங்கும் விடுதி நடத்தி வந்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் மசினகுடி ஊராட்சி நிர்வாகத்தில் வீடு கட்டுவதற்கு அனுமதி வாங்கி அதில் தனியார் தங்கும் விடுதி நடத்தி அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தங்க வைத்தது தெரியவந்தது.

இதனையடுத்து அப்பகுதியில் ஆய்வு செய்ததில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தனியார் தங்கும் விடுதி நடத்திய தெரிய வந்தது. இதனை அடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்டதில் 56 தனியார் தங்கும் விடுதிகளை கண்டறிந்து தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அதில் 15 நாட்களுக்குள் காலி செய்யவில்லை எனில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பாக நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.மேலும் ஊராட்சி நிர்வாகத்தில் அனுமதி பெற அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சில தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் விடுதிகளை தாங்களாகவே மூடி நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!