முதுமலை காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி

முதுமலை காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி
X

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் மற்றும் மசினகுடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வெளிமண்டல வனப்பகுதியில் மூன்றாம் கட்ட வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் அரிய வகை பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன.இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.

அதேபோல் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சீகூர் மற்றும் மசினகுடி வனச்சரகத்தில் வாழும் பல்வேறு வன விலங்குகளை கேமரா மூலம் பதிவு செய்யும் மூன்றாம் கட்ட கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்த இரு சரகத்தில் ஒவ்வொரு 2 கிலோ மீட்டர் பரப்பு ஒரு பிரிவாக பிரிக்கப்பட்டு 200 பிரிவுகளில் 400 கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு வன விலங்குகளின் நடமாட்டம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல வனப்பகுதியில் தொடங்கிய இந்த கேமரா பதிவு 25 நாட்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
பிஸிக்ஸ், தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை தெரிஞ்சிக்கலாம் வாங்க