யானைகள் புத்துணர்வு முகாமில் பொங்கல் விழா

நீலகிரி மாவட்டம் கூடலூர் முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமிலுள்ள யானைகளுக்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் யானைகளை ஆற்றில் குளிப்பாட்டி பின்பு யானைகள் அலங்கரிக்கப்பட்டு அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டது. பின்னர் யானைகளுக்கு சத்தான உணவுகள் மற்றும் பழங்களான வாழைப்பழம், ஆப்பிள், கரும்பு போன்றவை வழங்கப்பட்டது .இதை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் முகக் கவசங்கள் அணிந்து வளர்ப்பு யானைகளை கண்டு மகிழ்ந்தனர். வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!