கிராமத்தில் உலா வரும் யானை-பொதுமக்கள் அச்சம்

கிராமத்தில் உலா வரும் யானை-பொதுமக்கள் அச்சம்
X

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாஸ்போரா கிராமத்தை ஒட்டிய பகுதிகளில் காட்டு யானைகள் உலா வருவதால் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் அடிக்கடி யானைகளின் நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். குறிப்பாக வனத்தை ஒட்டிய தேயிலைத் தோட்டங்களில் அதிகமாக வரும் யானைகளின் நடமாட்டத்தால் தோட்டத் தொழிலாளர்களும் மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள போஸ்பரா செம்பக் கொல்லி பகுதியில் காட்டு யானை உலா வருவதால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வனத்துறையினர் ஊர் பொது மக்களுடன் சேர்ந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!