உதகையில் வனத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை
வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தலைமையில் உதகையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் பேசிய வனத்துறை அமைச்சர் நீலகிரி மாவட்டத்தில் கொரோனோ பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பேசினார்
மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் போதுமானதாக மாவட்டத்தில் இருப்பதாக கூறிய அமைச்சர் தமிழக அரசானது தற்போது எடுத்து வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும் மனித-விலங்கு மோதல் தடுக்கும் வகையில் வனத்துறையில் தனி குழு அமைக்கப்பட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும்
நீலகிரி மாவட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விதிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கா ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu