குன்னூரில் பலாப்பழ விற்பனை மந்தம்

குன்னூரில் பலாப்பழ விற்பனை மந்தம்
X
சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் பலாப்பழ விற்பனை மந்தமாகி உள்ளது. இதனால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளான பர்லியார், மரப்பாலம், கே.என்.ஆர். போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. தற்போது பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளதால் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் முகாமிட ஆரம்பித்துள்ளன. இதனால் மலை பாதைகளின் சாலை ஓரங்களில் பலாபழம் விற்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இருந்தபோதிலும் குன்னூர் பகுதிகளில் 5 கிலோ எடை கொண்ட பலாபழங்கள் 150 முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூர்வாசிகளும் இதனை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய பலாபழங்கள் இயற்கையான முறையில் விளைவதால் அதிசுவை பெற்றுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Tags

Next Story