ஊட்டியில் சட்டசபை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு

ஊட்டியில் சட்டசபை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
X

Nilgiri News, Nilgiri News Today-ஊட்டியில் சட்டசபை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு நடத்தினர். 

Nilgiri News, Nilgiri News Today- ஊட்டியில், சட்டசபை பொது நிறுவனங்கள் குழு, படகு இல்லம், பைகாரா நீர் மின்நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தினர்.

Nilgiri News, Nilgiri News Today- ஊட்டி, தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் சவுந்தரபாண்டியன் தலைமையில் உறுப்பினர்கள் அப்துல்சமது, ஆனந்தன், உடுமலை ராதாகிருஷ்ணன், கிரி, கோவிந்தசாமி, பிரகாஷ், பூண்டி கலைவாணன் ஆகியோர் அடங்கிய குழுவினர், நீலகிரி மாவட்டத்தில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் குன்னூர் டைகர்ஹில் பகுதியில் உள்ள டேன்டீ தேயிலை தொழிற்சாலைக்கு சென்றனர். அங்கு அவர்கள் தேயிலை கொள்முதல், உற்பத்தி, தரம் பிரித்தல், பேக்கிங், ஏற்றுமதி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவினர், ஊட்டிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு அவர்கள் ஊட்டி படகு இல்லத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு ரூ.3.20 கோடி மதிப்பில் மரவீடு உணவக கட்டுமான பணிகளை பார்வையிட்டு, விரைவில் பணிகளை முடித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினர். பின்னர் சிங்காராவில் 150 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பைக்காரா இறுதிநிலை நீர் மின்நிலையத்திலும் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நீலகிரியில் தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு நடத்தியபோது மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, முதுமலை புலிகள் காப்பக களஇயக்குநர் வெங்கடேஷ், சட்டசபை பொது நிறுவனங்கள் குழு இணை செயலாளர் பாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர்கள் பூஷணகுமார் (குன்னூர்), மகாராஜ் (ஊட்டி), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மணிகண்டன், தாசில்தார்கள் கனிசுந்தரம் (குன்னூர்), சரவணக்குமார் (ஊட்டி), டேன்டீ கோட்ட மேலாளர் பினோ, ஊட்டி படகு இல்ல மேலாளர் ஜோசப் வில்லியம்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !