நீலகிரி மாவட்டத்தில், 9 டன் குப்பைகள் அகற்றம்

நீலகிரி மாவட்டத்தில், 9 டன் குப்பைகள் அகற்றம்
X

Nilgiri News, Nilgiri News Today- தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள், உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Nilgiri News, Nilgiri News Today- சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் 9 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் 77-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, ‘எனது தாய்மண் எனது தேசம்’ என்ற நிகழ்வின் ஒருபகுதியாக ஒட்டுமொத்த சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கா, தூய்மைப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், தொண்டு நிறுவனத்தில், உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இச்சுகாதார பணியானது நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும், நீர்நிலை பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும், சோதனை சாவடிக்கு ஒட்டிய பகுதிகளிலும் மற்றும் இதர முக்கியமான பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது.

தூய்மை பணியில் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் 1178 தூய்மைப் பணியாளர்கள் , 1607 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், 98 அரசு சாரா தொண்டு நிறுவனத்தினர், 252 மாணவர்களும், 1581 அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என மொத்தம் 4716 நபர்கள் கலந்து கொண்டனர். தூய்மைப் பணியின் போது 1152 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் 7 ஆயிரத்து 898 கிலோ இதர குப்பைகள் என, மொத்தம் 9 ஆயிரத்து 50 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டு தூய்மை ப்படுத்தப்பட்டன. தூய்மைப் பணியின் போது நீலகிரி மாவட்ட த்திற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் பொது மக்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, நீலகிரியை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!