நீலகிரியில் இன்று 51 பேர் வேட்பு மனு தாக்கல்

நீலகிரியில் இன்று 51 பேர் வேட்பு மனு தாக்கல்
X
நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று 51 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19.2.2022 அன்று நடக்கிறது. வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-வது நாளாக வேட்புமனு தாக்கல் உள்ளாட்சி அமைப்புகளில் பெறப்பட்டது.

ஊட்டி நகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 33 பேர், குன்னூர் நகராட்சியில் 7 பேர், கூடலூர் நகராட்சியில் 5 பேர், நெல்லியாளம் நகராட்சியில் 6 பேர் மொத்தம் 51 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

அதிகரட்டி பேரூராட்சியில் 2 பேர், பிக்கட்டி பேரூராட்சியில் 8 பேர், தேவர்சோலை பேரூராட்சியில் 2 பேர், உலிக்கல் பேரூராட்சியில் 3 பேர், ஜெகதளா பேரூராட்சியில் 4 பேர், கேத்தி பேரூராட்சியில் 12 பேர், கீழ்குந்தா பேரூராட்சியில் ஒருவர், கோத்தகிரி பேரூராட்சியில் 5 பேர், நடுவட்டம் பேரூராட்சியில் 2 பேர், ஓவேலி பேரூராட்சியில் 3 பேர், சோலூர் பேரூராட்சியில் 2 பேர் மொத்தம் 44 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் மொத்தம் 95 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று வரை 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை 102 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!