நீலகிரியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
நீலகிரியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்
நீலகிரி மாவட்டத்தில் 12-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உள்பட மொத்தம் 280 நிலையான தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டது.
வனப்பகுதிகளை ஒட்டி இருப்பவர்களுக்கு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தினர். இதற்காக 20 நடமாடும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. மொத்தம் 300 முகாம்களில் 1,200 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
நீலகிரி கலெக்டர் எஸ்.பி.அம்ரித் உதகை படகு இல்லம், காதல் முக்கோணம் அங்கன்வாடி மையம், பிங்கர்போஸ்ட், குன்னூர் அருகே பேரட்டி, பாரஸ்டேன் ஆகிய இடங்களில் நடந்த தடுப்பூசி சிறப்பு முகாம்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தடுப்பூசி செலுத்த வந்தவர்களிடம் முதல் டோஸ் மற்றும் 2-வது டோஸ் செலுத்தப்பட்டதா என்று கேட்டறிந்தார்.
அவர்களிடம் வீட்டின் அருகே வசிப்பவர்கள் மற்றும் உறவினர்கள் யாரேனும் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
18 வயதிற்கு மேல் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu