நீலகிரியில் ரெட் அலர்ட்
இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையின்படி அரபிக்கடலில்உருவாகியுள்ள தாழ்வழுத்த நிலை புயலாக வலுப்பெற்றுள்ள காரணத்தால் எதிர்வரும்14.05.2021 முதல் 16.05.2021 தேதி வரை நீலகிரி மாவட்டத்திற்கு அதி கன மழைபெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அப்போது அதிக கனமழையும், பலத்தகாற்றும் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மரங்கள் விழக்கூடிய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டுவெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கு உட்பட்ட இடங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள.
283 பகுதிகளுக்கும் 42 மண்டலகுழுக்கள் ( (Zonal Teams)அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 வட்டங்களுக்கு அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை,காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை,பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள் துறை மற்றும்குடிமைப்பொருள் வழங்கல்துறைகளைச்சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இது தவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போதுமாவட்ட அவசரகால மையத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறே வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது. உதகை கோட்டத்திற்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்திற்கு 0423-2206002, கூடலூர் கோட்டத்திற்கு 04262-261295 உதகை வட்டத்திற்கு 0423-2442433, குன்னூர் வட்டத்திற்கு0423-2206102, கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718, குந்தா வட்டத்திற்கு 0423-2508123,கூடலூர் வட்டத்திற்கு 04262-261252, பந்தலூர் வட்டத்திற்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு பெறப்பட்ட தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இக்கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் பருவகாலங்களில் ஏற்படும் புயல், மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை இன்னல்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக தகவல் அளித்தல், உதவிகள் கோருதல் போன்ற காரணங்களுக்காக பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக "NeedD" என்ற கைப்பேசி செயலி (Mobile app) புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இச்செயலியில் நீலகிரிமாவட்டத்தில் உள்ள பேரிடர் அபாயமுள்ள 283 பகுதிகளின் விவரங்கள், அவசர உதவிகள் மற்றும் பேரிடர் பாதிப்புவிவரங்கள் தொடர்பான தகவல்கள் அளிக்க ஏதுவாக அனைத்து மாவட்டநிலை அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், முதல்நிலை பொறுப்பாளர்கள் ஆகியோர்களது விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள், அவசர தொலைபேசி எண்கள் ஆகியவற்றை உள்ளடக்கி அவர்களது கைப்பேசியிலிருந்து நேரடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளவும், மற்றும் மாவட்டத்தின் அவசர உதவிகளுக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்.1077-ல் மாவட்ட அவசர கால மையத்தை பொதுமக்கள் 24x7முறையில் தொடர்பு கொள்ள ஏதுவாக செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்செயலியை பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் Google play store-ல் சென்று NeedD உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இச்செயலியை இணைய இணைப்பின்றி பயன்படுத்தலாம் எனவே பொதுமக்கள் அனைவரும் இச்செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் 14.05.2021 தேதி முதல் 16.05.2021 தேதி வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் அவசர உதவி தேவைப்படின் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் அல்லது மாவட்ட அவசரகட்டுப்பாட்டு மையம் 1077- தொடர்பு கொள்ளவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் தங்களது பகுதிகளில் மின்தடை ஏதும் ஏற்படின் மற்றும் மின்சாரம் தொடர்பான புகார் ஏதும் இருப்பின் 1912 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தங்களது குறைகளை பதிவு செய்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட நிர்வாகம் மேற்படி இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார்நிலையில் உள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும்அடையவேண்டாம் நீலகிரி ஆட்சியர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu