முன்னாள் மாணவர்களின் நெகிழ்ச்சி சந்திப்பு

முன்னாள் மாணவர்களின் நெகிழ்ச்சி சந்திப்பு
X

ஊட்டி அரசு கலைக் கல்லூரி பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து நினைவு கூறும் நிகழ்ச்சி நடத்த கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டது. கல்லூரி இணையதளத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஒருங்கிணைப்பதை வெளியிட்டனர். முன்னாள் மாணவர்கள் பலர் பதிவு செய்தும், போனில் தொடர்பு கொண்டனர். வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி பலர் தங்களை இணைத்து கொண்டனர். நேற்று, பழைய மாணவர் சங்கத்தை சேர்ந்த, 100 பேர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கல்லூரி பருவத்தில் நடந்த சம்பவங்களை ஒருவருக்கொருவர் பரிமாறி, நினைவு கூர்ந்து குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். இதில், முன்னாள் மாணவரும், தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பதவி வகித்து ஓய்வு பெற்ற சுந்தரதேவன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி கூறுகையில், 1955 ம் ஆண்டு முதல், 2010 ம் ஆண்டு வரை படித்த, முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுரியின் சிறப்பம்சங்கள், மேம்பாடு குறித்து தகவல் பரிமாறப்பட்டது என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!