உணவுக்காக ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள்

உணவுக்காக ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள்
X

நீலகிரி மாவட்டத்தில் வறட்சி துவங்கியுள்ளதால் கோத்தகிரியில் தண்ணீர் தேடி நீண்ட தூரம் யானைகள் சென்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வறட்சி காலமாகும். தற்போது வறட்சி துவங்கியுள்ளதால் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.இதனால் புல்வெளி மற்றும் பசுமை மாறி அனைத்து இடங்களும் காயத்துவங்கியுள்ளது. இதனால் அவ்வப்போது காட்டு தீ ஏற்படுகிறது. வறட்சி காரணமாக நீர் நிலைகள் மற்றும் ஏரிகள் வறண்டு போவதால் வன விலங்குகள் தண்ணீர் கிடைக்காமல் போவதால் அவை தண்ணீர் தேடி நீண்ட தூரம் நடந்து செல்கின்றன.

இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரை கிராமம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. தற்போது வறட்சி காரணமாக அனைத்து இடங்களிலும் பசுமை இழந்து காய்ந்து காணப்படுகிறது. கிராமத்தின் வழியாக காட்டு யானைகள் தண்ணீர் தேடி சென்றுள்ளன. எனவே வனத்துறையினர் வனப்பகுதியிலேயே வன விலங்குகளுக்கு தண்ணீர் தேவைக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்