ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு
X
By - N. Iyyasamy, Reporter |8 March 2021 3:45 PM IST
வாக்களிப்பதன் அவசியம் குறித்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தேர்தல் ஆணையம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கறை நல்லதுங்க என கடந்த வாரம் விழிப்புணர்வு கொண்ட புகைப்படம் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் முழுவதும் ஒலிபெருக்கி மூலம் 100 சதவிகிதம் வாக்களிப்போம் என வாகனங்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu