புளியங்குடி DSP நெல்லை தனியார் மருத்துவமனையில் மரணம்

புளியங்குடி DSP நெல்லை தனியார் மருத்துவமனையில் மரணம்
X
கொரோனாவால் பாதிக்கப்பட்ட புளியங்குடி DSP நெல்லை தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி துணை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன்.இவர். கடந்த ஒரு மாத காலமாக நெல்லை தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.

மரணமடைந்த ஸ்ரீனிவாசனுக்கு சொந்த ஊர் சாத்துார். மனைவி மற்றும் ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.தன் குழந்தைகளின் படிப்புக்காக புளியுங்குடியில் பணியாற்றினாலும் திருநெல்வேலியில் தங்கி இருந்தார்.

இவர் இதற்கு முன்பாக முழுவதுமாக அதிரடிப்படை,உளவுத்துறை,லஞ்சஒழிப்புத்துறையில் நேர்மையாக பணியாற்றி SBCID ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் DSP யாக பதவி உயர்வு பெற்று புளியங்குடியில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!